அமெரிக்க NASA வில் கடமைபுரிந்த இலங்கையர் வபாத் – புத்தளத்தில் ஜனாஸா

Byadmin

Apr 16, 2024

புத்தளத்தை சேர்ந்த ரொஸ்மின் மஹ்ரூப் (அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவர்) வபாத்தானார்.

புத்தளம் Town பிரதேசத்தை சேர்ந்தவரும், அமெரிக்கா NASA வில் கடமை புரிந்து வந்தவருமான ரொஸ்மின் மஹ்ரூப் வபாத்தானார்.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்.

புத்தளம் சாஹிரா கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர் வானியற்பியல் துறையில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் அமெரிக்கா NASA வில்  கடமை புரிந்தும் வந்தவர்.

திடீர் சுகயீனமடைந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயின்று, தனது தனித்துவ திறமையால் உலகின் தலைசிறந்த நாஸா நிறுவத்தில் அழைப்பை ஏற்று சுமார் 10 வருட காலம் அமெரிக்காவின் நாஸா நிறுவனத்தில் பனி புரிந்து.

காலம் கடந்த விடுமுறை நாட்களை புத்தளம் மண்ணில் கழித்து மகிழ்ந்திட வருகை தந்து சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறைவனன அழைப்பை ஏற்று இவ்வுலக வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நண்பர் ரொஸ்மின் மஹ்ரூப் அவர்கள்.

தள வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்கு பின்பு அன்னாரின் ஜனாஷா இன்று மாலை 4:30 மணியளவில் புத்தளம் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது….

இறைவா அண்ணாரின் சகல பாவங்களையும் மண்ணித்து மேலான ஜென்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்தர சுவணத்தை நஸீபாக்கி வழங்கிடுவாயா…..  {ஆமீன்}
அன்னாரின் மண்ணரை வாழ்வு ஔி பொருந்தியதாக அமைந்திட வல்லவன் ரஹ்மானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *