இலங்கையில் பாரியளவில் குறைந்த கைப்பேசி விலை!

Byadmin

Apr 5, 2024

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை 18% – 20% வரை குறைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனை தெரிவித்தார்.
“தற்போது டொலர் 300 ரூபா வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக கையடக்க தொலைபேசிகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஐபோன் 15 pro max 515000 முதல் 530000 ரூபா வரை காணப்பட்ட விலை தற்போது 375000 ரூபா வரை குறைவடைந்துள்ளது. அதேபோல், குறைந்த விலையுடைய கைப்பேசிகளின் விலையும் 18 முதல் 20 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளதை காணக்கூடியதாய் உள்ளது. 
10,000 ரூபா வரை அதிகரித்திருந்த கைப்பேசியை தற்போது 7000 ரூபாக்கு பெற்றுக் கொள்ள முடியும்.”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *