இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 20-20 தொடருக்கான இலங்கை அணியில் நிரோஷன் திக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.
காயமடைந்த குசல் ஜனித் பெரேராவுக்குப் பதிலாக இவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குசல் ஜனித் பெரேரா சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வரும் நிலையில், நேற்று (29) பங்களாதேஷ் சென்ற அணியில் அவர் இணையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக நிரோஷன் திக்வெல்ல
