கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்

Byadmin

Feb 26, 2024

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்றும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகரித்துள்ள பணவீக்கம் காரணமாக அமெரிக்க வட்டி வீதக் குறைப்பு தாமதமானதன் பின்னணியில் டொலரின் பெறுமதி வலுவடைந்தமை இதனை பாதித்துள்ளது.
இதனால், பிரன்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.27 டொலர்களாக  குறைந்துள்ள நிலையில், அமெரிக்க WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76 .14 டொலர்களாக பதிவாகியுள்ளது.
டொலர் வலுவடைந்துள்ளதன் ஊடாக பரிவர்த்தனைகளில் வர்த்தகம் செய்பவர்களுக்கு எண்ணெய் மிகவும் விலையுயர்ந்த பொருளாகிறது.
இதேவேளை, அமெரிக்க டொலர் வலுவடைந்துள்ள பின்னணியில் உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றதுடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 2030.90 டொலர்களாக பதிவாகியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *