அதிக வெப்பமான வானிலை..! கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Byadmin

Feb 26, 2024

அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.  
இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம் மற்றும் உடல் சோர்வு, உடல் வெப்பம் அதிகரிப்பு, வலிப்பு, தலைவலி, நினைவிழப்பு, நாடித் துடிப்பு அதிகரிப்பு ஆகிய ​நோய் நிலைமைகள் ஏற்படும் கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது,  அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் விலகி நிழலான இடத்தில் ஓய்வெடுத்தல் மற்றும் போதுமான அளவு நீரினை அருந்துதல் ( 15 நிமிடத்திற்கு ஒரு தடவை அரை கோப்பை நீர்) போன்ற முதலுதவிகளை வழங்குமாறும் வலிப்பு, நினைவிழப்பு போன்ற நோய் நிலைமைகளின் போது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை செயற்பாடுகளில் ஈடுபடும் போது,

 மேலும், அதிக வெப்பமான வானிலை நிலவும் போது திறந்தவௌியில்/ மைதானங்களில் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்த்தல்.

மாணவர்கள் ஓய்வு பெறும் போது சூரிய ஔியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.

அதிகளவில் நீரினை பருக செய்ய வேண்டும் மற்றும் களைப்பினை தவிர்ப்பதற்காக இரண்டு குறுகிய ஓய்வு காலத்தினை வழங்குவது சிறந்தது.

மதியம் அதிக வெப்பம் நிலவும் வானிலையின் போது தேவையில்லாமல் வௌியில் அழைத்துச் செல்வதை தவிர்த்தல். ( பாடசாலைகளை போன்று வீடுகளிலும்)

அதிக வெப்பமான தினங்களில் வீடுட்டின் அருகில் உள்ள மைதானங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

குறித்த வழிகாட்டுதல்கள் மேலே…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *