டி 20 தொடர் இலங்கை வசம்!

Byadmin

Feb 19, 2024

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சதீர சமரவிக்கிரம 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 
ஏஞ்சலோ மெத்திவ்ஸ்  ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பெத்தும் நிஸ்ஸங்க 25 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 23 ஓட்டங்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் Azmatullah Omarzai மற்றும் Mohammad Nabi ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன்படி, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Karim Janat அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில், ஏஞ்சலோ மெத்திவ்ஸ், பினுர பெர்ணான்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் மதீஷ பத்திரன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *