இலங்கை அணிக்கு 267 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Byadmin

Feb 14, 2024

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (14) இடம்பெறுகிறது.
கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  266 ஓட்டங்களை பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிக பட்சமாக Rahmat Shah 65 ஓட்டங்களையும், Azmatullah Omarzai 54 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Pramod Madushan 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 267 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *