ஸ்திரமான நிலையில் இலங்கை கிரிக்கட் அணி

Byadmin

Feb 3, 2024

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டநேர முடிவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும்   இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 410 ஓட்டங்களைக் குவித்துள்ளது.
இன்றைய போட்டியில் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது 16வது டெஸ்ட் சதத்தையும், தினேஷ் சந்திமால் தனது 15வது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தனர்.
107 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தினேஷ் சந்திமாலும்  141 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஏஞ்சலோ மெத்யூஸூம் ஆட்டமிழந்தனர்.
அதேநேரம் Dimuth Karunaratne 77 ஓட்டங்களை பெற்றதுடன் Sadeera Samarawickrama ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *