அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் பயிலுனர் சட்டத்தரணி ஒருவரை நீதிமன்றில் இருந்து கலகெடிஹேன பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணிகள் உட்பட ஐவர் தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (31) அத்தனகல்ல நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர்கள் ஐவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், அத்தனகல்ல நீதவான் மஞ்சுள கருணாரத்ன தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் சந்தேகநபர்களை விடுவித்துள்ளார்.
பயிலுனர் சட்டத்தரணியை தாக்கிய சட்டத்தரணிகளுக்கு பிணை!
