தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று(22) காலை 8.30 முதல் 8.40 மணிக்குள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஒருவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வெள்ளை நிற டிஃபென்டர் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரை இலக்கு வைத்து பச்சை நிற கெப் வண்டியில் வந்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெலியத்த துப்பாக்கிச் சூட்டில் அரசியல் கட்சி தலைவரும் பலி
