கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் பணிப்பெண் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் காலி நீதவான் நீதிமன்றில் பிரேரணை மூலம் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்ட விசேட வைத்திய நிபுணர் கிரிஷாந்த பெரேராவும் இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய கனிஷ்ட ஊழியர்களுக்கும் பிணை
