யாழ் போதனாவில் மேலும் இரு டெங்கு மரணங்கள்

Byadmin

Jan 19, 2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்தார்.
பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 
அதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் டெங்கு நோய் தீவிரமான நிலையில் யாழ்ப்பபண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *