உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சை 2 ரத்து

Byadmin

Jan 12, 2024

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி பரீட்சையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி வினாத்தாளின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னர் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக வெளியான தகவலை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

விவசாய விஞ்ஞான பாடத்திற்கான 2 ஆம் பகுதி பரீட்சை ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்றது.

எவ்வாறாயினும், இந்த வினாக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்பட்டதாக வெளியான தகவலை உறுதிப்படுத்தும் உண்மைகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நடத்திய விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *