பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இன்று பாராளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.
எதிர்க்கட்சியில் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இந்த கேள்வை எழுப்பியிருந்தார்.
‘அரசாங்கம் இன்று அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளது, அதேபோல் பல்கலைக்கழக பேராசியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளது. வைத்தியர்களுக்கு அதிகரித்துள்ளது. ஆனால் 2021 ஆம் ஆண்டில் இருந்து தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாகும். இன்றும் ஆயிரம் ரூபாய்தான். நீங்கள் நூற்றுக்கு 18 சதவீத வற் வரியும் அறிவிட்டு தற்போது பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏன் அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்பேற்று எதாவதொரு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதில்லை. சம்பள அதிகரிப்பு தொடர்பில்.’
இதற்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,
தோட்ட தொழிலாளர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் இம்முறை விசேடமாக கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்கள் சில இடம்பெற்றுள்ளன. தங்களின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வினை பெற்றுக் கொடுக்க எதிர்ப்பார்துள்ளோம். என்றார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விரைவில் தீர்வு!
