சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றமை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஜனித் லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் தனது சதத்தை விட போட்டியில் வெற்றி பெறுவதே முக்கிய குறிக்கோளாக இருந்ததாகவும் ஜனித் லியனகே தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனித் லியனகே கருத்து தெரிவிக்கையில்,
”முதல் 2 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு, இறுதிவரை துடுப்பாட வேண்டும் என்று நினைத்தேன். நன்றாக விளையாடினால், தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்று நினைத்தேன்.”
“சதத்தை விட போட்டியில் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம். மழையால் நாங்கள் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சுமார் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். அந்த ஓவரில் 6 ஓட்டங்கள் எடுத்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருக்கலாம் என்று நினைத்தேன். எனது சதத்தை விட அந்த நேரத்தில் அணியை எப்படி வெற்றிபெற வைக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.” எனவும் குறிப்பிட்டார்.
சிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நேற்று (08) 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியின் வெற்றிக்கா விளையாடிய ஜனித் லியனகே 95 ஓட்டங்களைப் பெற்றார்.
ஜனித் லியனகே 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கலாக தனது முதல் ஒருநாள் அரை சதத்தை அவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.