டெங்கு நோய் தொடர்பில் வௌியான தகவல்

Byadmin

Jan 7, 2024

நாளாந்தம் 300க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 1,871 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 643 ஆகும்.
கடந்த 06 நாட்களில் வடக்கு மாகாணத்தில் இருந்து 438 நோயாளர்களும் வடமேல் மாகாணத்தில் இருந்து 165 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
எவ்வாறாயினும், கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *