விசேட பாதுகாப்பு தொடர்பில் விளக்கம்

Byadmin

Dec 24, 2023

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இன்று (24) நள்ளிரவு முதல் உதயமாகிறது.
இந்நிலையில் நத்தார் காலத்தில் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் அறிவிக்க பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விசேட இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
இதன்படி, 011 247 27 57 என்ற இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை அறிவிக்க முடியும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *