யாழில் இளம்தாய் உயிரிழப்பு

Byadmin

Nov 29, 2023

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை வருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர்.
தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 27 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *