பொலித்தீனை உண்ண வைத்த சம்பவம் – அதிபர் விளக்கமறியலில்

Byadmin

Nov 29, 2023

பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீனை பலவந்தமாக உண்ண வைத்த சம்பவத்தில் கைதான சந்தேகநபரான அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 05 மாணவர்களே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் நேற்று (28) நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று (29) நாவலப்பிட்டி நீதவான் நிலந்த விமலவீர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரான அதிபரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியைச் சேர்ந்த 47 வயதுடைய அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *