தனது உயிருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் தகவல் அறிக்கையை சமர்ப்பித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை – பதுலுவெவ – சிறிசங்கபோ பிரதேசம், இலக்கம் 1 இல் வசிக்கும் ஆர்.எஸ். ரொஷான் அனுருத்த செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக் கொள்ளைப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் மேலும் தெரிவித்தனர்.
அமைச்சர் ரொஷானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் விசாரணை
