இதுதான் எழில் கொஞ்சும் பாலஸ்தீன நகர்களில் ஒன்றான ஏக்கர் (Acre) நகராகும். பாலஸ்தீனின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள இந்நகர் தற்போது ஆக்கிரமிப்பு இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
1948 ல் நடந்த (நக்பா) பேரவலத்தை அடுத்து அங்கிருந்த பூர்வீக பாலஸ்தீனியர்கள் விரட்டப்பட்டதோடு, யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகராக கருதப்படும் இந்நகரில்தான் நபித்தோழர் முஆவியா பின் அபூ ஸுஃப்யான் அவர்கள் ஒரு கப்பல் தொழிற்சாலையையும் முதல் கடற்படையையும் தேற்றுவித்தார்.
பின்னர் இங்கிந்துதான் சைப்ரஸ் நாட்டை வெற்றிகொள்ள படை புறப்பட்டது.