2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இன்று (10) அதிகாலை தாயகம் திரும்பியது.
இந்தியாவின் பெங்களூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல். – 174 விமானம் ஊடாக இலங்கை அணி நாடு திரும்பியிருந்தது.
அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பலர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வந்திருந்தனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தனர்.
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து வௌியேறுவதற்கு அவர்களுக்கு பேருந்தொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், பல வீரர்கள் தங்களது சொந்த வாகனங்களில் தங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அவர்களின் பாதுகாப்பிற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.