DLS முறையில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

Byadmin

Nov 4, 2023

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி DLS முறையில் 21 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் Rachin Ravindra, 108 ஓட்டங்களையும் Kane Williamson, 96 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Mohammad Wasim Jr, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 402 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டு இழப்பிற்கு துடுப்பெடுத்து ஆடிக்கொண்டிருக்கும் வேளையில் மழை குறிக்கிட்டது.

தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. எனினும், DLS விதிகளின் படி பாகிஸ்தான் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் Fakhar Zaman 126 ஓட்டங்களையும், Babar Azam 66 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Tim Southee 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *