205 வெற்றி இலக்கு

Byadmin

Oct 31, 2023


உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (31) நடைபெறுகிறது.

இந்த போட்டி கொல்கத்தாவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணியின் சார்பில் Mahmudullah அதிகபட்சமாக 56 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Shaheen Shah Afridi, Mohammad Wasim தலா 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி பாகிஸ்தான் அணிக்கு 205 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *