வேகமாக பரவும் 3 வகையான நோய்கள்

Byadmin

Oct 23, 2023

நிலவும் மழையுடனான காலநிலையால், நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது மூன்று வகையான தொற்று நோய்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில பகுதிகளில் கண் நோய், வயிற்றுப்போக்கு, சுவாசக் கோளாறுகளுடன் கூடிய காய்ச்சல் போன்றவை பதிவாகி வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் தமது சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளித்துள்ளார் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,

“இம்மூன்று நோய்களையும் கட்டுப்படுத்த தனிமனித சுத்தம் மிகவும் அவசியமானது.மேலும், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தணிந்து வருவதால், தீவின் பல பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் பாரியளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அந்த அனர்த்தத்தை தடுக்க பொதுமக்கள் பூரண ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மக்கள் அதிக கவனம் எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் ஏராளமான உயிர்கள் பறிபோகும்” என்றார். 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *