285 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Byadmin

Oct 15, 2023


உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறுகிறது.

அருண்ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Rahmanullah Gurbaz அதிகபட்சமாக 80 ஓட்டங்களை பெற்றதுடன் Ikram Alikhil 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Adil Rashid 3 விக்கெட்டுக்களையும் Mark Wood 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி இங்கிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *