இந்த நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் கண் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், எனினும் நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘கான்ஜுன்க்டிவிடிஸ்’ (Conjunctivitis) எனப்படும் இந்த கண் நோய் வைரஸால் ஏற்படுகிறது மற்றும் அதன் அறிகுறிகளில் கண்களில் வலி, கண்ணீர், கண் சிவத்தல், கண்களில் நீர் வடிதல் போன்றவை ஆகும்.
இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக விரைவாகப் பரவக்கூடியது என்றும் நோய்வாய்ப்பட்ட நபரின் கண்ணீர் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரப்புகளால் மட்டுமே இது நிகழ்கிறது என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுவாக, இந்த வைரஸ் கண் நோய் இந்த நாட்களில் நிலவும் வானிலை நிலைமைகளுடன் பரவுகிறது.
தற்போது இந்த நோய் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு பரவி வருகின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்த கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலய அதிபர் மோகன் வீரசிங்க,
“கடந்த வாரம் வியாழன் அன்று, 6 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்புகளில் சுமார் கண் நோயால் பாதிக்கப்பட்ட 40 குழந்தைகளை நாங்கள் கண்டுபிடித்தோம். வெள்ளிக்கிழமையும் சுமார் 30 குழந்தைகள் கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். திங்களன்று சுமார் 35 குழந்தைகள் கண் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகள் இந்த 4 நாட்கள் நடாத்தப்படவில்லை.”
இதன்படி, நோய் பரவும் இடங்களில் வகுப்புகளை நடத்த வேண்டாம் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் நிமல் ஜயவீர சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அறிவித்துள்ளார்.
இந்நோய் தாக்கிய பின் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் நோயின் தாக்கத்தை குறைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கண் நோய் காரணமாக மூடப்பட்ட வகுப்புக்கள்!
