ஜெனிவா பயணமாகும் ஜீவன்!

Byadmin

Oct 11, 2023

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுவிஸ் தலைநகர் ஜெனிவாவுக்கு இன்று (11.10.2023) பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உலக நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் சர்வதேச தொழிற்சங்க மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அமைச்சர் ஜெனிவா செல்கின்றார். ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே இக்கூட்டம் நடைபெறும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்கவும் அமைச்சருடன் செல்கின்றனர்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளரையும் இவ்விஜயத்தின்போது சந்தித்து அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. ‘மலையகம் – 200’ நிகழ்வு தொடர்பாகவும் சர்வதேச சமூகத்துக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *