நியூசிலாந்து அணி வெற்றி

Byadmin

Oct 9, 2023

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 06ஆவது போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 99 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
போட்டியில்  முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் குவித்தது.

நியூசிலாந்து அணி சார்பாக வில் யங் அதிகபட்சமாக 70 ஓட்டங்களை பெற்றார்.

மேலும் நியூசிலாந்து அணியின் தலைவர் டொம் லேதம், 53 ஓட்டங்களை பெற்றார்.

பந்துவீச்சில் நெதர்லாந்து அணி சார்பாக Aryan Dutt, Paul van Meekeren மற்றும் Roelof van der Merwe ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
323 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 46 ஓவர்கள் 3 பந்துகளில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
நெதர்லாந்து அணியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய கொலின் அக்கர்மன் 69 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில்  நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *