ஜனாதிபதி அலுவலகத்தில் பிரித்தானிய எம்.பிக்கள்

ByEditor 2

Jul 27, 2025

ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் பிற்பகல் வருகை தந்தது.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் சிறு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி அலுவலக நூலகம், பழைய பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை கூட்ட மண்டபம் உள்ளிட்ட பழைய இடங்களைப் பார்வையிடும் வாய்ப்பு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்தது.

ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *