இரு யானைகளுக்கு இடையே மோதல்

ByEditor 2

Jul 26, 2025

மெதிரிகிரிய, கவுடுல்ல நீர்த்தேக்கத்திற்கு அருகில் வெலிதுடு பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகளுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலில் படுகாயமடைந்த யானை ஒன்று உயிரிழந்துள்ளது. 

அதன்படி, இன்று (26) காலை கிரிதலே வனவிலங்கு கால்நடை பிரிவின் கால்நடை வைத்தியர் சமீரா கலிகுஆராச்சியால் யானையின் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. 

சமீபத்தில் யானை ஒன்றுடன் இடம்பெற்ற மோதலின் போது ஏற்பட்ட பலத்த காயங்களே யானையின் மரணத்திற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார். 

இறந்த காட்டு யானை சுமார் 40 வயதுடையது என்றும் சுமார் 9 அடி உயரம் கொண்டதெனவும் தெரியவந்துள்ளது. 

யானையின் உயிரைக் காப்பாற்ற கடந்த சில நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *