219 மருந்தகங்களின் உரிமம் ரத்து

ByEditor 2

Jul 25, 2025

2025 ஜூலை 18, க்குள் நாட்டில் உள்ள 219 மருந்தகங்களின் உரிமங்களை, தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் (NMRA)   ரத்து செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்தார்.

2024-2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்காக 2,039 விண்ணப்பங்களை மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளதாகவும், 1,820 மருந்தகங்களுக்கு மட்டுமே உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நிரந்தர மருந்தாளுநர்கள் இல்லாததால் 219 மருந்தகங்களில் 137 மருந்தகங்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

நிரந்தர மருந்தாளுநர்கள் பணியமர்த்தப்படும் வரை அவர்களின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சமூக மருந்தக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியதால் 219 மருந்தகங்களில் 82 மருந்தகங்களின் உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *