“கள்ளக்காதலுக்கு மூளை மழுங்கிப்போய்விடுகிறது”

ByEditor 2

Jul 23, 2025

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்.. உண்மையில் சிலரது காதலுக்கு கண் மட்டுமல்ல, காது, இதயம், மூளை எதுவுமே இருப்பது இல்லை.. அதுவும் கள்ளக்காதலுக்கு மூளை சுத்தமாக வேலை செய்யாமல் மழுங்கிப்போய்விடுகிறது..

திருநெல்வேலியில் ஒரு 16 வயது பெண், சமூக வலைதளங்களில் பழகிய 40 வயது நபரை காதலித்துள்ளார். அவருடன் தான் செல்வேன் என்று செல்ல அடம்பிடித்து பொலிஸ் ஸ்டேஷனில் செய்த வேலை கண்டு பொலிஸார் தலையிலேயே அடித்துக் கொண்டனர்.. இப்படியும் சமூக மாறிவிட்டதா என்ற அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் கண்டதையும் பார்க்கும் இளம் சிறார்கள், தவறான பாதையில் பயணிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் யாருடைய ரீல்ஸ்க்கு அதிக லைக் கிடைக்கிறது. யாருடைய ரீல்ஸ் அதிக ஷேர் ஆகிறது.யாருக்கு அதிக பாலேயர்கள் வருகிறார்கள் என்பது தான் உலகம் என்பது போல் பல சிறார்கள் மாறிவருகிறார்கள். இதற்கு இன்ஸ்டாஇன்புளுயன்சர்களும் ஒரு வகையில் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் வருமானம், லைப் ஸ்டைல் போன்ற காரணங்களை கூறலாம்.

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த 40 வயதாகும் முருகன் என்பவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், பத்தமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதாகும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் சமூகவலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளார்கள்.

கடந்த 14-ந் திகதி பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பத்தமடை பொலிஸ் நிலையத்தின் மாடியில் செயல்பட்டு வரும் சேரன்மாதேவி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்கள். பொலிஸார் நடத்திய விசாரணையில் மாணவி தனது காதலனுடன் திருச்செந்தூருக்கு சென்றதை கண்டுபிடித்தனர். பொலிஸார், மாணவியின் பெற்றோர் திருச்செந்தூருக்கு சென்றனர். அங்கிருந்த 2 பேரையும் அழைத்து வந்தனர்.

பின்னர் சேரன்மாதேவி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, மாணவி பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. தனது காதலனை விட்டு பிரிந்துச்செல்ல மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறினார். எனினும் மாணவி மைனர் என்பதால் காப்பகத்தில் ஒப்படைக்க போவதாக பொலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த மாணவி பிடிவாதமாக பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் பொலிஸ் ஸ்டேஷனின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது 2 கால் மூட்டு பகுதியில் முறிவு ஏற்பட்டு, வலியால் துடித்தார். அங்கிருந்த அனைவரும் ஆடிப்போனார்கள். உடனடியாக அவரை பொலிஸார் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் இதேபோன்று அதே மாணவியை வெளியூர் அழைத்துச் சென்றது தொடர்பான போக்சோ வழக்கு நிலுவையில் இருக்கிறது. முருகனுக்கு திருமணமாகி மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் ஆனவர் என்று தெரிந்தும், மாணவி 40வயதாகும் முருகனுடன் தான் செல்வேன்என்று பொலிஸ் ஸ்டேசனில் அடம் பிடித்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் 2 கே கிட்ஸ்களுக்கும், பெற்றோர்களுக்கும் பாடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *