சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 – மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 – பி.ப. 5.00 (i) வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது).
(ii) வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு (இச்சட்டமூலம் விசேட பெரும்பன்மையுடன் நிறைவேற்றப்படவுள்ளது).
(iii) வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
பி.ப. 5.00 – பி.ப. 6.00 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி).