2,828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் ஒருவர் கைது

ByEditor 2

Jul 21, 2025

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாருடன் இணைந்து 2025 ஜூலை 19 ஆம் திகதி நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று இருபத்தெட்டு (2828) கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவிற்கு சொந்தமான ஒரு பகுதியாக இருக்கும் நுரைச்சோலை கடற்படைப் பிரிவு, நுரைச்சோலை பொலிஸாருடன் இணைந்து, நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனையிட்டனர்.

இச்சோதனையின் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எழுபது (70) பைகளில் அடைக்கப்பட்ட சுமார் 2828 கிலோகிராம் உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுரைச்சோலையை வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், சந்தேக நபரும், உலர்ந்த இஞ்சி பொட்டலமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *