மானை சுட்டுக்கொன்ற மூவருக்கு விளக்கமறியல்

ByEditor 2

Jul 18, 2025

நுவரெலியா சீதா எலிய வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மானை சுட்டுக் கொன்று, ப்ரோடோ வகை ஜீப்பில் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா சீதா எலிய வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மானை சுட்டுக் கொன்ற மூன்று சந்தேக நபர்களை நுவரெலியா பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு,   நுவரெலியா நீதவான் லங்கானி பிரபுத்திகா முன், வியாழக்கிழமை (17) ஆஜர்படுத்தினர்,   மூன்று சந்தேக நபர்களையும் ஜூலை 31 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குருநாகல் மற்றும் தங்கொட்டுவ பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதுக்குட்பட்ட மூன்று சந்தேக நபர்கள், தங்கள் ப்ரோடோ ஜீப்பில் நுவரெலியாவிற்கு வந்து, உரிமம் பெறாத 12 போரா துப்பாக்கியை பயன்படுத்தி மானை சுட்டுக் கொன்றுள்ளனர்.

 நுவரெலியாவில் உள்ள சீதா எலிய அம்மன் கோவில் அருகே உள்ள காப்பகத்தில் சுற்றித் திரிந்த நன்கு வளர்ந்த மானை சுட்டுக் கொன்ற  அவர்கள் அதை ப்ரோடோ ஜீப்பில் மறைத்து வைத்து, தங்கொட்டுவவிற்கு கொண்டு சென்று கொண்டிருந்தனர். நுவரெலியா போக்குவரத்து  பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜீப் மீது சந்தேகம் ஏற்பட்டபோது, ஜீப்பை சோதனை செய்தபோது அவர்கள் சுட்டுக் கொன்ற மான் இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.

மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்து சோதனை செய்தபோது, உரிமம் பெறாத 12-துளை துப்பாக்கி, 09 தோட்டாக்கள், 165 ஈய பந்துகள் (சிறியது), 09 ஈய பந்துகள் (சற்று பெரியது), ஒரு பிரோடோ வகை ஜீப் மற்றும் வேட்டையாடப்பட்ட ஒரு மான் ஆகியவை மீட்கப்பட்டன.

நுவரெலியா பொலிஸ் தலைமையக தலைமை ஆய்வாளர் பிரேமலால் ஹெட்டியாராச்சி கூறுகையில், சந்தேக நபர்கள் சிறிது காலமாக மான்களைப் பிடித்து கொல்லும் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *