பாடகர் ஶ்ரீநிவாஸ் யாழில்

ByEditor 2

Jul 18, 2025

தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். 

அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (19) மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து கொள்வனவு செய்ய நிதி திரட்டும் நோக்கில், மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்ச்சி ஒரு களியாட்ட நிகழ்வாக இல்லாமல், மருத்துவ பீட மாணவர்கள் மற்றும் மருத்துவ சமூகத்தை மேம்படுத்தும் நிகழ்வாக அமையும் என மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

நிகழ்ச்சியில் பாடகர் ஸ்ரீநிவாஸ், ஜீவன் சரண்யா ஸ்ரீநிவாஸ், ஈழத்து பாடகி கில்மிசா, அக்சயா ஆகியோர் பங்கேற்கின்றனர். 

அவர்களை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *