’’ஹாரி பொட்டர்’’ நடிகைக்கு வாகனம் ஓட்ட தடை

ByEditor 2

Jul 18, 2025

‘ஹாரி பொட்டர்’ திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் ஹாரி பொட்டர் திரைப்படங்களில் வரும் ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை 8 ஹாரி பொட்டர் படங்களில் நடித்துள்ளார். தனது 10 வயது முதல் நடிக்க வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *