போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

ByEditor 2

Jul 17, 2025

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று (16) இரவு சென்னையில் இருந்து வந்த 23 வயதுடைய டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பெண் பேங்கொக்கில் இருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்த பிறகு, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். பின்னர் விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, அவரது பயணப் பைக்குள் இருந்து குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 

அத்தோடு, பயணப் பைக்குள் இருந்த 25 உணவுப் பொதிக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோகிராம் 356 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *