குளவி தாக்கியதில் 14 பேர் பாதிப்பு

ByEditor 2

Jul 16, 2025

தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களை குளவி தாக்கியதில் 14 பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நல்லதண்ணி தோட்டத்தைச் சேர்ந்த 9 தோட்டத் தொழிலாளர்களும், டொரிங்டன் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த 5 பெண் தொழிலாளர்களுமே இவ்வாறு குளவி தாக்குதலுக்குள்ளாகினர்.   

குளவி கூடுகளை பருந்துகள் தாக்குவதால் கிளர்ந்தெழுந்த குளவிகள், தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களை தாக்குவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *