ரூ.31.17மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதை பொருளை கட்டுநாயக்கவிமான நிலையத்தில் “ரெட் சேனல்” வழியாக நாட்டுக்குள் கடத்த முயன்ற இலங்கை பயணி ஒருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் புதன்கிழமை (16) அன்று கைது செய்துள்ளனர்.
மட்டக்குளியாவைச் சேர்ந்த 49 வயதான தொழிலதிபர் ஒருவரே கைது செய்யப்பட்டள்ளார்.
தாய்லாந்திலிருந்து 50 குடைகளை வாங்கி, அவற்றில் 20 குடைகளை பொதியிலிருந்து அகற்றி, அதனை “குஷ்”போதைப் பொருளால் நிரப்பியுள்ளார்.
அவர் தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் மும்பைக்கு சென்று, அங்கிருந்து, இண்டிகோ விமானம் 6.E.- 1185 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சுங்க அதிகாரிகளின் கவனத்தைத் திசை திருப்பவே அவர் இவ்வாறு பயணித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அவர் 20 குடைகள் கொண்ட பொதிகளில் 03 கிலோ 117 கிராம் “குஷ்” போதைப் பொருளை மறைத்து வைத்திருந்தார், அவற்றை பறிமுதல் செய்து திறந்த போதுவிமான நிலைய வளாகம் முழுவதும் போதைப்பொருளின் வாசனை கடுமையாக பரவியது.
கைது செய்யப்பட்ட பயணியையும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


