ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்

ByEditor 2

Jul 16, 2025

பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் ஜூலை 16  சந்தித்தார். அப்போது, பாராளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் திகதி பதவியேற்க உள்ளதை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.

இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

  “மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *