அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

ByEditor 2

Jul 16, 2025

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இலங்கையின் அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதற்கு முன்னர் இந்தப் பதவிக்கு முஸ்லிம் பெண்ணொருவர் நியமனம் பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த பாத்திமா ஹஸ்னா, அஞ்சல் திணைக்கள உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவகத்தில் அஞ்சல் பயிற்சிப் போதனாசிரியராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *