கர்ப்பமான 17 மணித்தியாலங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

ByEditor 2

Jul 16, 2025

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தாம், கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்த 17 மணித்தியாலங்களில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார்.

இரண்டு வருடங்களாக ஒருவரைக் காதலித்து வந்த இந்த பெண், தான் சந்தோசமாக இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதாக நினைத்திருந்தார்.

க்ரிப்டிக் கர்ப்பம் (Cryptic Pregnancy)

அந்த பெண் தான் கர்ப்பமாக இருப்பதை மிகவும் தாமதமாகவோ அல்லது பிரசவம் தொடங்கும் வரை கூட உணரவில்லை. மேலும், மாதவிடாய் சுழற்சியும் சரியாகவே இருந்துள்ளது.

இவ்வகையான கர்ப்பம், க்ரிப்டிக் கர்ப்பம் (Cryptic Pregnancy) என்று அழைக்கப்படுகின்றது. இதனை இரகசிய கர்ப்பம் என்றும் அழைப்பார்கள். இந்நிலையில், குறித்த பெண் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த வகையான கர்ப்பங்கள் மிகவும் அரிதானவை எனவும், குறைந்தபட்ச அறிகுறிகளால் அவை கவனிக்கப்படாமல் போகலாம் என்றும், இந்த நேரங்களில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *