கடுமையாக அதிகரித்த வெற்றிலையின் விலை

ByEditor 2

Jul 14, 2025

சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரித்ததால் அன்றாட வர்த்தகம் வேகமாகக் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *