யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை சாதனை!

ByEditor 2

Jul 12, 2025

2024 கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (GCE O/L) பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது.

அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் 120 பேர் 9A பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலையில் 265 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் 120 மாணவிகள் 9 A பெற்றதுடன், 36 மாணவிகள் 8 A ம், 25 மாணவிகள் 7A ம் பெற்றதாக பாடசாலை அதிபர் கிரேஸ் தேவதயாளினி தேவராஜா கூறியுள்ளார்.

அதேவேளை வெளிவந்த கபொத(சா/த) பரீட்சை முடிவின்படி வட மாகாணம் 9 வது இடத்தில் இருப்பது மாத்திரமல்லாமல் உயர்தரத்திற்கு தகுதி பெற்றோரின் வீதம் 69.86% ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *