மூட நம்பிக்கையால் ஐவர் எரித்துக் கொலை (இந்தியா)

ByEditor 2

Jul 8, 2025

இந்தியாவில் மூட நம்பிக்கையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கிராமத்தவர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் டகொமா கிராமத்தை சேர்ந்த பாபு லால். இவரது குடும்பத்தினரான சீதா தேவி, மன்ஜத் ஒரன். ராணியா தேவி, டபோ மோஸ்மட் மற்றும் ஒரு குழந்தை அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இதனிடையே, பாபு லால் குடும்பத்துடன் சேர்ந்து மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் நம்பியுள்ளனர். பாபு லால் மாந்திரீகத்தால் கிராமத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதாக மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து நேற்று பாபு லால் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பாபு லால் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தம் 5 பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர், 5 பேரின் உடலையும் அதேவீட்டில் வைத்து தீ வைத்து எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஒரு குழந்தை மட்டும் உயிர் தப்பியுள்ளது.

தகவல் அறிந்து குறித்து அறிந்த பொலிசார், விரைந்து வந்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தநர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *