இலங்கையின் நிர்வாக கட்டமைப்பில் ஒரு முக்கிய நபராக அறியப்பட்ட பிரட்மன் வீரக்கோன் தனது 94ஆவது வயதில் காலமானார்.
அவர் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
பிரட்மேன் வீரக்கோன் தனது ஆரம்பக் கல்வியை களுத்துறை ஹோலி கிராஸ் கல்லூரியில் கற்றார். பின்னர், குருதலாவ புனித தோமஸ் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை கற்றார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் கௌரவப் பட்டத்தையும், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் Fulbright புலமைப்பரிசிலைப் பெற்று சமூகவியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
1954ஆம் ஆண்டில் இலங்கை சிவில் சேவையில் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் பணியாற்றியுள்ளார். பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலவின் செயலாளராக பதவியேற்று பின்னர் 2002 வரை தெரிவான 7 பிரதமர்கள் மற்றும் 2 ஜனாதிபதிகளின் செயலாளராக பதவி வகித்துள்ளார்.