ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ByEditor 2

Jul 5, 2025

மஹியங்கனை, குருமட பிரதேசத்தில் இரு நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட நபரின் உறவினரின் மரண வீடொன்றில் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலில் காயமடைந்த நபர் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

title

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *