வத்தளை பகுதிகளில் குவிக்கப்பட்ட STF மற்றும் பொலிஸார்!

ByEditor 2

Jul 5, 2025

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.


குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நேற்று (04) இரவு இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து அனைத்து வீதிகளையும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.


கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.


இதன் விளைவாக, இந்தப் பகுதிகளில் திடீர் சுற்றிவளைப்பு உட்பட தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *